மக்களை தேடி மருத்துவ முகாம்


மக்களை தேடி மருத்துவ முகாம்
x

சிவந்திபுரம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

அம்பாசமுத்திரம் யூனியன் சிவந்திபுரம் ஊராட்சி உதிரமுத்தான்பட்டி துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் பொது மருத்துவம் மற்றும் எக்ஸ்ரே வேன் முலம் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. துணை இயக்குனர் வெள்ளைச்சாமி அறிவுறுத்தலின் படி நடந்த இந்த முகாமுக்கு வட்டார மருத்துவர் பிரவின் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் வக்கீல் ஜெகன் முன்னிலை வகித்தார். முகாமில் ரமீஸ் ராஜா, சதீஸ்குமார் மற்றும் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சந்துரு ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர் ஆனந்த் மக்களை தேடி மருத்துவ குழுக்கள் ஆஷா ஆகியோர் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் வேலு, சுகாதார மேற்பார்வையாளர் பெல்பின் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story