உயிர் காக்கும் மருத்துவ பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும்
உயிர் காக்கும் மருத்துவ பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும் என பட்டமளிப்பு விழாவில் திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் கூறினார்.
திருவாரூர்;
உயிர் காக்கும் மருத்துவ பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும் என பட்டமளிப்பு விழாவில் திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் கூறினார்.
பட்டமளிப்பு விழா
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தலைமை தாங்கினார். அப்போது 104 மருத்துவ மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பாராட்டி பேசினார்.அப்போது அவர் கூறியதாவதுமருத்துவ பணி என்பது மிக சிறப்புக்குரிய பணியாகும். பட்டம் பெற்ற மாணவர்கள் மருத்துவ பணியினை சேவை நோக்கத்துடன் செய்யவேண்டும்.அர்ப்பணிப்பு உணர்வு உயிர் காக்கும் மருத்துவ பணியினை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும். மருத்துவ பணியில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு பல சாதனைகளை படைத்திட வேண்டும். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் ராஜேந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, விடுதி காப்பாளர்கள் டாக்டர் சிவக்குமார், பிரீத் சக்கரவர்த்தி மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.