பஸ் சக்கரத்தில் சிக்கி மருத்துவ கல்லூரி மாணவர் பலி


பஸ் சக்கரத்தில் சிக்கி மருத்துவ கல்லூரி மாணவர் பலி
x

பஸ் சக்கரத்தில் சிக்கி மருத்துவ கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் முகமது ரகுமான் (வயது 20). இவர் சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை தனது நண்பர் அப்துல்லா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்கள் பின்னால் வந்த மாநகர பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் முகமது ரகுமானின் இடுப்பு பகுதியில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடைய நண்பர் அப்துல்லா சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story