தேனி கலெக்டர் அலுவலகம் அருகில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்


தேனி கலெக்டர் அலுவலகம் அருகில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்
x

தேனி கலெக்டர் அலுவலகம் அருகில் சாலையோரம் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

தேனி

தேனி கலெக்டர் அலுவலக பின்புறம் புதிய பஸ் நிலையம் செல்லும் திட்டச்சாலை உள்ளது. இந்த சாலையோரம் இன்று காலை மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு குவிந்து கிடந்தது. யாரோ மர்ம கும்பல் மருத்துவ கழிவுகளை அங்கு கொட்டிச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வலி நிவாரணம், காய்ச்சல் போன்ற சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்து புட்டிகளும் அதில் கிடந்தன.

இதனால் ஏதேனும் மருத்துவமனை அல்லது சட்டவிரோதமாக மருத்துவ சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் மூலம் யாரேனும் இதை கொட்டிச் சென்றார்களா? என்று தெரியவில்லை. கலெக்டர் அலுவலக வளாக பகுதி என்பதால், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பலரும் இந்த மருத்துவ கழிவுகளை வேதனையுடன் பார்த்துச் சென்றனர். தினமும் காலை, மாலை நேரங்களில் இந்த சாலையில் பலர் நடைபயிற்சி செய்வார்கள். இங்கு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதால் மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது.

எனவே, மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தவும், அவற்றை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story