மருந்துகளை எப்போதும் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்


மருந்துகளை எப்போதும் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்
x

அரசு மருத்துவமனையில் எப்போதும் மருந்துகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

வேலூர்

அரசு மருத்துவமனையில் எப்போதும் மருந்துகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அமைச்சர் ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அதன்படி பொன்னை, மேல்பாடி, திருவலம், கழிஞ்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள குறைகளையும் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் ஆய்வு செய்ததுடன், மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து பல்வேறு சிகிச்சை அறைகளுக்குச் சென்று பார்வையிட்ட அமைச்சர், நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்

மேலும் மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக தகுந்த முறையில் சிகிச்சை அளிப்பதுடன், நோயாளிகளுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் எந்தவித குறையும் இன்றி இருக்க வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் சிறப்பு வார்டுகள் அனைத்து வசதிகளுடன் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அமைச்சர், டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார், கல்லூரி டீன் செல்வி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story