மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர்

கீழப்பழுவூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் ஊராட்சியில் உள்ள செம்பியன் மாதேவியின் ஏரி கரையில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன், ஸ்ரீ மதுரை வீரன் ஆகிய கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 5-ந்் தேதி மாலை விநாயகர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவை நடைபெற்றன. 6-ந் தேதி கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனித தீர்த்தம், முளைப்பாரி ஆகியவை எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து 7-ந் தேதி காலை ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டது. காலை 2-ம் கால பூஜை, 3-ம் கால பூஜை, 4-ம் கால பூஜை, 5-வது கால பூஜை ஆகியவை நடத்தப்பட்டன. இதையடுத்து நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story