மீனாட்சிபட்டி கல்லூரி ஆண்டு விழா


மீனாட்சிபட்டி கல்லூரி ஆண்டு விழா
x

மீனாட்சிபட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி

ஏரல்:

மீனாட்சிபட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வக்கீல் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். போப் கவுன்ஸில் சேர்மன் ஜான் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.சாயர்புரம் சேகர தலைவர் டேனியல் ஞானப்பிரகாசம் அனைவருக்கும் ஆசி வழங்கினார். தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரி பீட்டர் தேவதாஸ், இந்தியன் டென்டல் அசோசியேஷன் தலைவர் டாக்டர் அருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் முன்னதாக கல்லூரி தாளாளர் ராஜரத்தினம் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் அருள்மொழி செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் ஜானகி ராஜரத்தினம் மற்றும் பிரியா பிரகாஷ் ராஜ் குமார் ஆகியோர் கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கினர். விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.


Next Story