மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி


மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில்  பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கைப்பந்து மற்றும் எறிபந்து போட்டிகள் நடந்தது. இந்த போட்டி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் தலைமை தாங்கினார். இந்த விளையாட்டுப் போட்டியை ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அளவிலான பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடின.

மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும் பெற்றன. எறிபந்து போட்டியில் தூத்துக்குடி கமாக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தூத்துக்குடி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடமும் பெற்றன. மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியில் தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தூத்துக்குடி சுப்பையா மகளிர் மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடமும், எறிபந்து போட்டியில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், சுப்பையா மகளிர் மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடமும் பெற்றன.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி சுழற் கோப்பை பரிசு வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை கல்லூரி தாளாளர் ராஜரத்தினம் வாழ்த்தினார்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிறுவனர் தலைமையில் முதல்வர் அருண்மொழி செல்வி, உடற்கல்வி இயக்குனர்கள் மெர்சி பத்மாவதி, அசோக் விக்டர், ஜூலி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


Next Story