மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா:கனிமொழி எம்.பி. பங்கேற்பு
மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.
ஏரல்:
மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் 9-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.கல்லூரி தாளாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி எம்.பி. கனிமொழி 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சேகர தலைவர்கள் பண்ணவிளை ஜான் வெஸ்லி, மூக்குப்பிரி டேனியல் ஞானப்பிரகாசம், சத்தியநகரம் தனசீலன், புதியபுத்தூர் லிவிங்ஸ்டன், செவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் மேல்நிலைப்பள்ளி கல்விக்குழு தலைவர் சின்னதங்கம், அம்மன்புரம் பஞ்சாயத்து தலைவர் ஞானராஜ், சாயர்புரம் செவத்தையாபுரம் லயன்ஸ் கிளப் தலைவர் ஜெயராஜ், கல்லூரி பி.ஆர்.ஓ. விஜயபாஸ்கர், மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் கல்லூரி சார்பில் பிரியா பிரகாஷ் ராஜ்குமார் கனிமொழி எம்.பி.க்கு நினைவு பரிசு வழங்கினார். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமையில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.