மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் புதிய கட்டிடம் திறப்பு விழா
மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி
ஏரல்:
மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் பயோமெடிக்கல் பொறியியல் பாடப் பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கல்லூரி நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. கல்லூரி தாளாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். பண்ணவிளை சேகரகுரு ஜான் வெஸ்லி விழாவை தொடங்கி வைத்து இறை ஆசி வழங்கி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஜானகி ராஜரத்தினம், பிரியா பிரகாஷ் ராஜ்குமார், கல்லூரி முதல்வர் அருண் மொழி செல்வி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story