தொடர் குற்ற சம்பவங்கள் எதிரொலிபொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது


தொடர் குற்ற சம்பவங்கள் எதிரொலிபொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 17 July 2023 12:30 AM IST (Updated: 17 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக வடமாநில தொழிலாளர்கள் தங்கி உள்ள ஆலை கொட்டகை, டிராக்டர்கள், குடிசை, பள்ளி பஸ் போன்றவற்றுக்கு தீ உள்ளிட்ட தொடர் குற்ற செயல்கள் நடந்தன. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதோடு நிற்காமல் அப்பகுதி தோட்டங்களில் இருந்த பாக்கு மரங்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு செடி ஆகியவை வெட்டி சாய்க்கப்பட்டன.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா உத்தரவின்பேரில் ஜேடர்பாளையம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிநவீன டிரோன் கேமராக்களை பறக்க விட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த டிரோன் கேமரா முறையாக பறக்கவிட்டு கண்காணிக்கப்படுகிறதா? என பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையிலான போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதையொட்டி ஆனங்கூர், பாகம்பாளையம், அய்யம்பாளையம் பகுதிகளில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் பேசினார். அப்போது பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே மர்ம நபர்களை கண்டுபிடிக்க இயலும். மர்ம நபர்கள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

மேலும் ஒவ்வொரு நாளும் இரவில் ஒவ்வொரு ஊரை சேர்ந்த 10 வாலிபர்கள் போலீசாருடன் இரவு நேர ரோந்துக்கு வர வேண்டும் என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.


Next Story