பா.ஜ.க. நிர்வாகிகள் அறிமுக கூட்டம்


பா.ஜ.க. நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
x

ஓசூரில் பா.ஜ.க. நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மத்திய பா.ஜ.க. ஆட்சியில், ஓராண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், குறிக்கோள்கள் மற்றும் மாநில தலைமையின் திட்டங்கள், எண்ணங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வருகிற 10-ந்தேதி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை வருகை தருகிறார். அவர் சூளகிரியில் கலந்து கொள்ளும் விழாவின் நேரம், இடம் விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் எம்.முருகன், பி.எல்.மனோகர், கே.ராமலிங்கம், அன்பரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கிஷோர், பொருளாளர் முருகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மல்லேஷ் ரெட்டி மற்றும் மாவட்ட அணிகள், பிரிவுகளின் நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.


Next Story