சங்க பொதுக்குழு கூட்டம்
சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
பரமக்குடி,
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் சலுகைகள் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் பரமக்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு கட்டுமான மத்திய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அமைப்பு சாரா மத்திய சங்க மாவட்ட தலைவர் நாகசாமி, ஓய்வுபெற்ற பதிவாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளூவூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உதயசூரியன் வரவேற்றார். இதில் தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் அழகேசன், இணை பொதுச் செயலாளர் ஜெகதீசன், மாநில அமைப்புச் செயலாளர் சதீஷ்குமார், மாநில இளைஞரணி செயலாளர் சமய செல்வம், இளை ஞரணி துணை தலைவர் பிரபு, மாநில பொதுச் செயலாளர் கண்ணன், சிவகங்கை மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகர்மன்றத் துணைத் தலைவர் குணா, பொதுக் குழு உறுப்பினர் அருளானந்து, வேந்தோணி ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை ராணி துரைராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர பாண்டியன், வைகை பாசன பொதுச்செயலாளர் மதுரை வீரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.