தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம்


தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம்
x

தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடக்கிறது.

சிவகங்கை

காரைக்குடி,

தமிழக ஊராட்சித்துறை அமைச்சரும் தி.மு.க. சிவகங்கை மாவட்ட செய்லாளருமான கே.ஆர். பெரிய கருப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கழகத்தின் ஒன்றிய கழக நிர்வாகிகள் தேர்தல் 6-ந் தேதி காலை 10 மணி அளவில் காரைக்குடி பி.எல்.பி. பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட கழக செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில இலக்கிய அணித் தலைவர் தென்னவன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தலைமை கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையாளர் ராஜா அருள்மொழி 15-வது ஒன்றிய கழகத்திற்கான அவைத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர், மாவட்ட பிரதிநிதி, செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவிக்கான விண்ணப் பங்களை வழங்குகிறார். அதற்குரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை தேர்தல் ஆணையாளரிடம் தரப்படவேண்டும். மாலை 4 மணிக்கு மேல் தரப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. எனவே ஒன்றிய செயலாளர்கள் இதுகுறித்து அனைவருக்கும் தகவல் தெரியப்படுத்தவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story