நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்


நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும்  செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்  சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
x

நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

நாமக்கல்

நாமக்கல்:

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சவுந்தரம் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் வைரம், கால்நடை சங்க முன்னாள் பொதுச்செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைவர் இந்திரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த துணை சுகாதார மைய கட்டிடங்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்ப வழங்க வேண்டும். நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களின் தொகுப்பூதியத்தை காலமுறை ஊதியமாக மாற்ற வேண்டும். துணை இயக்குனர் கட்டுப்பாட்டில் பணிபுரியும் செவிலியர்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு அரசால் வழங்கப்பட்ட ஊக்கத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதை உடனடியாக வழங்க வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் அரசால் நியமிக்கப்பட்ட கணினி உதவியாளர்கள், துணை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நிர்வாக ஊழியர்கள் மற்றும் செவிலியர்களின் பணி பாதிக்கப்படுகிறது. எனவே கணினி உதவியாளர்களை சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இதில் மாவட்ட துணைத்தலைவர் கஸ்தூரி, செயலாளர் சுமதி, பொருளாளர் கல்பனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story