தர்மபுரியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்


தர்மபுரியில்  காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்
x

தர்மபுரியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த கோவி சிற்றரசு தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் எம்.பி. தீர்த்தராமன் நியமிக்கப்பட்டார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் முன்னாள் மாவட்ட தலைவர் கோவி சிற்றரசு தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர்கள் இளங்கோவன், பாலகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கட்சியின் வட்டார நகர நிர்வாகிகள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைப்படி நடைபெறும் தர்மபுரி மாவட்ட உள்கட்சி தேர்தல் பணிகளில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் முழுமையாக ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story