புதிதாக 79 துப்புரவு பணியாளர்களை நியமிக்க முடிவு


புதிதாக 79 துப்புரவு பணியாளர்களை நியமிக்க முடிவு
x

தாராபுரம் நகராட்சியில் 79 புதிய ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை நியமிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்

தாராபுரம் நகராட்சியில் 79 புதிய ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை நியமிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சி கூட்டம்

தாராபுரத்தில் நகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சித் தலைவர் கே.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை மற்றும் சாலைவசதி உள்ளிட்ட பிரச்சினைகளை குறித்து பேசினர்.

இதற்கு பதில் அளித்து தலைவர் பாப்பு கண்ணன் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் தி.மு.க. ஆட்சிக்கு எந்த களங்கமும் ஏற்பட்டால் அதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இதனால் அதிகாரிகள் முறையாக கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த பணிகளை சரிவர செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

துப்புரவு பணியாளர்கள்

மேலும் தாராபுரம் நகராட்சியில் சாக்கடை பிரச்சினை, குடிநீர் வினியோகிப்பதில் குளறுபடி இருந்து வந்தது. அதை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பொக்லைன் எந்திரம் வாங்குவது, துப்புறவு பணிகளை அதிகப்படுத்த 79 புதிதாக துப்புரவு பணியாட்கள் நியமிப்பது, நமக்கு நாமே திட்டத்தில் நகராட்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, மேலும் நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு துப்புரவு பணியாட்கள் நியமிப்பது உள்ளிட்ட 62 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி புதிய வழக்கறிஞராக நியமிக்கப் பட்ட கலைச்செழியனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


Related Tags :
Next Story