சேந்தமங்கலம் அரசு ஆண்கள் பள்ளியில் பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு கூட்டம்


சேந்தமங்கலம் அரசு ஆண்கள் பள்ளியில்    பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு கூட்டம்
x
தினத்தந்தி 9 July 2022 5:44 PM IST (Updated: 9 July 2022 5:45 PM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அரசு ஆண்கள் பள்ளியில் பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு கூட்டம் நடந்தது.

நாமக்கல்

சேந்தமங்கலம்:

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் மூலமாக சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உதவி தலைமை ஆசிரியை சாந்தி அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியர் முத்துசாமி தலைமை தாங்கினார். அப்போது பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்து கொள்ள நடைபயிற்சி செல்பவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், மாணவர்களை கண்காணிக்க பள்ளியில் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் கூறினார். கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் சரஸ்வதி, ஒன்றிய குழு உறுப்பினர் கடல் வீரன் பெரியசாமி, உடற்கல்வி ஆசிரியர் தனபால், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா, அறக்கட்டளை நிர்வாகிகள் கதிர்வேல், சண்முகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story