தேரோட்டம், ஆடி அமாவாசை குறித்த முன்னேற்பாடு கூட்டம்


தேரோட்டம், ஆடி அமாவாசை குறித்த முன்னேற்பாடு கூட்டம்
x

தேரோட்டம், ஆடி அமாவாசை குறித்த முன்னேற்பாடு கூட்டம் நடந்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால், இந்த தேரோட்டத்தை மிக சிறப்பாக நடத்துவது தொடர்பாக அனைத்து துறை அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் முன்புறம் உள்ளமண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். சப் கலெக்டர் பிரதிவிராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நகர்மன்ற தலைவர் தங்கம், ரவி, கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன், இன்ஸ்பெக்டர் கீதா, நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம், தாசில்தார் ராமசுப்பிரமணியம் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேரோட்டம் தொடர்பாக விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். முன்னதாக வத்திராயிருபபு அருகே உள்ள தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் அதற்கான ஏற்பாடுகள் குறித்த கூட்டம் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின்போது பக்தர்களுக்கு மலையில் ஏறும் பொழுது குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



Next Story