தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
ஓசூரில் தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் மாநகர தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர கட்சி பொறுப்பாளர் சீனிவாச மூர்த்தி, அவைத்தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் விண்ணப்ப படிவங்கள் கட்சியினருக்கு வழங்கப்பட்டது. இதில், ஒன்றிய செயலாளர் கண்டராயன், மாநகர பொருளாளர் அப்பய்யா, அறிவழகன், வெங்கடேஷ், மணி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story