பா.ஜ.க. செயற்குழு கூட்டம்


பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
x

பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை நகர் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நகர தலைவர் உதயா தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் மார்த்தாண்டன், மாவட்ட செயலாளர் சாந்தி, நகர பொதுச்செயலாளர்கள் பாலமுருகன், சதீஷ், பொருளாளர் கவுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சிவகங்கை உழவர் சந்தை அருகே மீன் வியாபாரிகளுக்கு உதவிடும் வகையில் மீன் மார்க்கெட் அமைத்துதர வேண்டும். சிவகங்கை நகர் பஸ் நிலையம் அருகில் இயங்கி வரும் மதுபான கடையை அகற்ற வேண்டும். சிவகங்கை தாலுகா அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரத்தை மனு கொடுத்தவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பிரதமரின் படத்தை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story