விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
சீர்காழி போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கினார். விநாயகர் சதுர்த்தி விழா குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், பா.ஜனதா நிர்வாகிகள் சண்முகம், முருகன், விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் சதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுகையில், 'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலையை புதிய இடத்தில் வைக்க கூடாது. கடந்த ஆண்டு சிலை வைத்த இடத்திலேயே இந்த ஆண்டும் சிலைகளை வைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த மறு தினமே சிலைகளை கரைத்து விட வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சாதி, மதம் சார்ந்த கோஷங்களை எழுப்ப கூடாது. இதுபோன்ற விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். கூட்டத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செந்தில், விநாயகர் சதுர்த்தி விழா குழுவை சேர்ந்த முருகன், பாலகுமாரன், ராஜா, செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் நன்றி கூறினார்.