ராசிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்


ராசிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
x

ராசிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

நாமக்கல்

ராசிபுரம்:

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகள் வைப்பது மற்றும் அவற்றை ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுகவனம், சிவசங்கரன், ஹேமாவதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிலை வைப்பதற்கான முன் அனுமதி, கரைக்கப்படும் இடங்கள், நேரம், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வதிமுறை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் சிலைகளின் மாசற்ற தன்மையை உறுதி செய்ய வேண்டும். ஒலி பெருக்கி மற்றும் சிலை வைப்பதற்கு போலீஸ் நிலையத்தில் தடையின்மை சான்று பெற வேண்டும். 10 அடி உயரத்திற்கு மேல் சிலைகள் வைக்க கூடாது. சிலை வைத்த 3-வது நாளில் நீர் நிலைகளில் அவற்றை கரைக்க எடுத்து செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.


Next Story