விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள் வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்-துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகள் வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.
நாமக்கல்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் போலீஸ் உட்கோட்டத்துக்குட்பட்ட ஜேடர்பாளையம், பரமத்தி, நல்லூர், வேலூர், வேலகவுண்டம்பட்டி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகள் வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். அப்போது அவர், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லும் போது அரசின் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வீரம்மாள், சுரேஷ், ரவிச்சந்திரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.
Next Story