பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
சாயல்குடி,
சாயல்குடி பேரூராட்சியில் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு டேபிள் மற்றும் சேர்களுக்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சாயல்குடி பேரூராட்சி பகுதியில் வீடுகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டும். சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், வார்டு உறுப்பினர்கள் காமராஜ், கோவிந்தன், குமரையா, அழகுவேல் பாண்டியன், ஆபிதா அனிபா அண்ணா, இந்திராணி, பானுமதி, இந்திரா செல்லத்துரை ஆகியோர் கலந்துகொண்டனர்.