திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்


திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
x

திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கம்புணரியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகினி செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிங்கம்புணரி ஒன்றிய இளைஞரணி மனோகரன், நகர இளைஞரணி அருண் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், திராவிடர் கழகம் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாநில சுயாட்சி என்ற தலைப்பில் கருணா பேசினார். முன்னதாக சிங்கம்புணரி நகர செயலாளர் கதிர்வேல், வடக்கு ஒன்றிய செயலாளர், நகர அவைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

இதில், பேரூராட்சி தலைவர் அம்பல முத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி துணைத் தலைவர் இந்தியன் செந்தில், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சிவபுரி சேகர், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், பிரதிநிதி குடோன்மணி, புகழேந்தி, நகர பொருளாளர் செந்தில் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைச்சர் பெரிய கருப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.


Next Story