கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் சாலை வசதி, மின்சார வசதி, வீட்டு மனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 298 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர். அந்த மனுக்களை பெற்ற வருவாய் அலுவலர், மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story