தி.மு.க. கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


தி.மு.க. கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

ஆலாபுரம் ஊராட்சியில் தி.மு.க. கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் ஊராட்சியில் தி.மு.க. கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், ஆசிரியர் வேலு, பொ.மல்லாபுரம் நகர செயலாளர் கவுதமன், நிர்வாகி சத்யமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் தனேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் தாமோதரன் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் மருக்காலம்பட்டி, ஜீவா நகர், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யவேண்டும். நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்டத்தை சரி செய்ய வேண்டும். இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சமுதாயக்கூடம் ஒன்று அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் சக்திவேல், கார்மேகம், வடிவேல், செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story