ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரை பழைய குத்பா பள்ளிவாசலில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து ஜமாத் கூட்டமைப்பில் இருந்து அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் நலத்திட்டங்கள் குறித்து பைத்துல் மால் உறுப்பினர் முகமது முகைதீன் எடுத்துரைத்தார். கூட்டத்தில் மேலத்தெரு உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்கம், தெற்கு தெரு ஜமாத் தலைவரும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் துணைத் தலைவருமான உமர் களஞ்சியம், வடக்குத்தெரு துணைத் தலைவர் அப்துல் ஹமீது, கிழக்குத் தெரு ஜமாத் தலைவர் பானா மூனா, பழைய குத்துபள்ளி தலைவர் அபுதாஹிர், மின் ஹாஜியார் பள்ளி தலைவர் சாகுல் ஹமீது, நடுத்தெரு ஜமாத் செயலாளர் பாரூக் உள்பட 8 ஜமாத்தினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தெற்குத்தெரு ஜமாத் செயலாளர் சயீது இபுராகிம், மூர் ஹசனுதீன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story