தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன


தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலர் உஷாராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவித்தொகை, உதவி உபகரணங்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.

தீர்வு காண உத்தரவு

இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் பல்வேறு வகையான கோரிக்கைகளை கலெக்டர் சாந்தி கேட்டறிந்தார். அப்போது பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அந்த கோரிக்கை மனுக்களை துறை அலுவலர்களிடம் வழங்கிய கலெக்டர் உரிய விசாரணை நடத்தி கோரிக்கைகளுக்கு தீர்வு காண உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள், நிதி உதவி ஆகியவை குறித்து மாற்றுத்திறனாளிகள் உரிய விழிப்புணர்வு பெற வேண்டும். அந்த திட்டங்கள் மூலம் பயன்பெற முன் வரவேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Next Story