மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி நடைபெற உள்ளது.

சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந் தேதி காலை 10 மணியளவில், சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா தலைமையில் இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், யு.டி.ஐ.டி. பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு, பிற துறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள், வங்கி கடனுதவி, வேலைவாய்ப்பு பயிற்சி, பராமரிப்பு உதவித்தொகை, உதவித்தொகை உள்ளிட்டவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த உதவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4, குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story