அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்


அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித்துறை சார்பில் அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.

தர்மபுரி

வருமான வரித்துறை சார்பில் அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

வருமான வரித்துறையின் சார்பில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்வது குறித்து அலுவலர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் வருமான வரித்துறை துணை ஆணையர் பாரதி கலந்துகொண்டு, வருமான வரி தாக்கல் மற்றும் வருமான வரி பிடித்தம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அலுவலர்களுக்கு விளக்கி கூறினார். மேலும் வருமான வரி பிடித்தம் செய்வதற்கான விதிமுறைகள், வருமான வரி சட்ட விதிகள், தாக்கல் செய்ய வேண்டிய படிவங்கள், கால வரைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து விளக்கி கூறினர்.

சரியான நேரத்தில் தாக்கல்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள் துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள், பணியாளர்கள் வருமான வரி வரம்பிற்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்து, ஒவ்வொரு வருடத்திற்கும் தவறாமல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதில் குறைகள் ஏதேனும் இருந்தாலோ அல்லது சந்தேகங்கள் இருந்தாலோ இதுகுறித்து வருமான வரி அதிகாரியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் அரூர் உதவி கலெக்டர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுமதி, மாவட்ட கருவூல அலுவலர் சுப்பிரமணியன், ஓசூர் வருமான வரித்துறை அலுவலர் ஷீதீஜ் ரஞ்சன், ஓசூர் வருமான வரி ஆய்வாளர் துர்கா பிரசாத் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story