வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருவாரூர்
குடவாசல் தாசில்தார் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி தலைமை தாங்கினார். தாசில்தார் குருநாதன், சமூக நலத்திட்ட தாசில்தார் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல துணை தாசில்தார் சரவணகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story