கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் தர்மபுரியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குழந்தைவேலு தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முருகேசன், துணை செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்டிட தொழிலாளர் சங்க மாநில செயலாளர் முனுசாமி கோரிக்கைகள் குறித்து பேசினார். கட்டிட தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு உரிய நேரத்தில் நலத்திட்டங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பபட்டன. இதில் நிர்வாகிகள், தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story