தேனியில் வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர்களுடன் ஆய்வு கூட்டம்


தேனியில் வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர்களுடன் ஆய்வு கூட்டம்
x

தேனியில் வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

இதில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதைச்சான்று துறை, விதை ஆய்வுத்துறை, கால்நடை பராமரிப்பு துறை. பட்டுவளர்ச்சித்துறை மற்றும் மீன்வளத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய-மாநில அரசு திட்டங்களின் இலக்கு, சாதனை குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து பல்வேறு அறிவுரைகளை கலெக்டர் வழங்கி பேசினார். இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா, தோட்டக்கலை துணை இயக்குநர் சீதாலட்சுமி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story