தேவகோட்டை நகர்மன்ற கூட்டம்
தேவகோட்டை நகர்மன்ற கூட்டம் நடந்தது.
சிவகங்கை
தேவகோட்டை,
தேவகோட்டை நகர் மன்ற அவசர கூட்டம் அதன் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ரமேஷ், ஆணையாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி நிர்வாகங்களில் வார்டு வாரியாக அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா குழுக்கள் அமைத்து அந்த குழுக்களுக்கு செயலாளர்களை தேர்ந்தெடுத்தும் மற்றும் அவர்களின் பொறுப்புகள் பணிகள் குறித்து நிறைவேற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அந்த தீர்மானத்தின் மீது துணை தலைவர் ரமேஷ், தி.மு.க. கவுன்சிலர் பாலா, அ.தி.மு.க. கவுன்சிலர் வடிவேல் முருகன் ஆகியோர் பேசினர். பின்னர் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக நகர் மன்ற தலைவர் அறிவித்தார்.
Related Tags :
Next Story