திருப்புவனம் பேரூராட்சி கூட்டம்


திருப்புவனம் பேரூராட்சி கூட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் தேர்வு நிலை பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவர் சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரகமத்துல்லாகான் முன்னிலை வகித்தார். அனைவரையும் செயல் அலுவலர் ஜெயராஜ் வரவேற்றார். மன்ற பொருட்கள் விபரத்தினை இளநிலை உதவியாளர் நாகராஜன் வாசித்தார். கூட்டத்தில் பிறப்பு-இறப்பு, வளமீட்பு பூங்காவில் உள்ள புராதான கழிவுகளை பிரித்து மீட்டெடுத்தல், ஊருணி மேம்பாடு செய்தல், பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்தல், கூடுதல் வசதியுடன் பூங்கா மற்றும் போர்வெல் அமைத்தல், மயான சுற்றுச்சுவர் அமைத்தல், தார் சாலைகள் அமைத்தல், கழிப்பறை கட்டுதல், பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல், மின் கம்பங்களை மாற்றி அமைத்தல் உள்பட பல மன்ற பொருட்கள் வாசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story