ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் கலந்துகொண்டு இளையான்குடி பேரூராட்சியில் செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் குறித்தும், தேவையான புதிய திட்டங்கள் குறித்தும் அதிகாரிகள் மற்றும் மன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்தார். முதல்-அமைச்சரின் புதிய திட்டங்களின் 10 கோரிக்கைகள் குறித்தும், இளையான்குடி ஒன்றியத்தில் செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் குறித்தும் ஒன்றிய பொறுப்பாளர்களிடம் ஆலோசனை செய்தார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், தாசில்தார் அசோக்குமார் மற்றும் காளிமுத்து, ராஜபாண்டி, மலைமேகு, கூட்டுறவு வேளாண்மை சங்க தலைவர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராஹிம், நூலகர் அந்தோணிசாமி, சாரதி, ஆரிப், ரிஷி, பைரோஸ்கான், காசிம், தௌலத், இப்ராஹிம்ஷா, உமர் கத்தாப் மற்றும் நகர், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story