தர்மபுரியில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்-முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை வாரியார் பள்ளி எதிரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். மாவட்ட அவை தலைவர் நாகராஜன், இணை செயலாளர் செல்வி திருப்பதி, துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் நல்லதம்பி, ஒன்றிய செயலாளர்கள் செல்வம், சிவப்பிரகாசம், பழனி, வேலுமணி, மதிவாணன், செந்தில்குமார், கோபால், செல்வராஜ், செந்தில், தனபால், அன்பு, பசுபதி, தங்கராஜ், மகாலிங்கம், விஸ்வநாதன், சேகர், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான செம்மலை, தலைமை கழக பேச்சாளர்கள் முத்து மணி, புதூர் மணி, அமைப்பு செயலாளர் கே.சிங்காரம், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் தகடூர் விஜயன், பழனிசாமி, மோகன், அசோக்குமார், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.