சிறப்பு கிராமசபை கூட்டம்


சிறப்பு கிராமசபை கூட்டம்
x

உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1-ந்தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கிறது.

ராமநாதபுரம்


நவம்பர் 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினமான அனுசரிக்கப் பட்டு வருகிறது. அதனையொட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அன்றையதினம் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி 1.11.22 அன்று காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடித்து கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த கிராமசபை கூட்டத்தில், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி, சொத்து வரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக்குழு உருவாக்குதல், பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்டங்கள், மக்கள் நிலை ஆய்வு, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்ட பயனாளிகள் தேர்வு செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதித்திட அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story