1-ந் தேதி கிராம சபை கூட்டம்


1-ந் தேதி கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

1-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1-ந் தேதியன்று காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடத்தப்படவுள்ளது. ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணிகள் குறித்து மாவட்ட அளவில் கண்காட்சிகள் நடத்தவும், அரசால் வெளியிடப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்த குறும்படங்கள் காட்சிப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், மகளிர்சுய உதவி குழுவினர் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிராம சபையில் பாராட்டு தெரிவிக்கப்படும். எனவே நவம்பர் 1-ந் தேதியன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story