தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம்
தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
காரைக்குடி,
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்று(வியாழக்கிழமை) மாலை 5 மணியளவில் காரைக்குடியில் உள்ள மாவட்ட தி.முக. அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருஷ்ணன் அரங்கில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர் பட்டியல் தயாரிப்பது, நாளை(வெள்ளிக்கிழமை) திருப்பத்தூரில் நடைபெறும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள்.குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.