இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டியில் தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பி.பழனியப்பன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், துணை செயலாளர்கள் மணி, கிருஷ்ணகுமார், ராஜகுமாரி, மாவட்ட பொருளாளர் முருகன், அரூர் வடக்கு ஒன்றிய செயலாளா் வேடம்மாள், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளா் சரவணன், பொ.மல்லாபுரம் நகர செயலாளர் கவுதமன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய செயலாளா் முத்துக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் சேப்பாக்கம் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் எழிலரசன் பேசுகையில், இந்தியாவில் இருக்கின்ற 22 மொழிகளில் இந்தியை மட்டும் எப்படி ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ள முடியும். தமிழ் இருக்கும் வரை இந்தி மொழிக்கு தமிழகத்தில் இடமில்லை. தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது. புதிய தேசிய கல்வி கொள்கை மூலமாக இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இந்தி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தமிழை பாடமாக வையுங்கள். இதுசமூக நீதியை கொண்ட மாநிலம் என பேசினார்
கூட்டத்தில் மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கீரை விஸ்வநாதன், ஆதிதிராவிட நலக்குழு மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சித்தார்த்தன், பி.சி.ஆர்.மனோகரன், சென்னகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் செங்கண்ணன், நெப்போலியன், கோபால், அன்பழகன், சிவப்பிரகாசம், சந்திரமோகன், சக்திவேல், சவுந்தராசு, சேட்டு, மாது, ரத்தினவேல், கிருஷ்ணன், நிர்வாகி மெடிக்கல் சத்யமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாப்பிரெட்டிப்பட்டி நகர செயலாளர் ஜெயசந்திரன் நன்றி கூறினார்.