பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பீணியாறு ஆற்றோரம் உள்ள தனியார் கிழங்கு மில் ரசாயன கழிவுகள் நேரடியாக பீணியாற்றில் கலக்கிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.
இது மட்டுமில்லாமல் கிணற்று தண்ணீர் முற்றிலும் மாசடைந்து வருகிறது. இதனை கண்டித்து வருகிற 18-ந் தேதி தாசில்தார் அலுவலகம் முன்பு பீணியாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் ஏ.பள்ளிப்பட்டியில் உள்ள விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவரின் விவசாய தோட்டத்தில் நடைபெற்றது. இதில் 8 வழி சாலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், சுரேஷ், வீரமணி உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story