நகர்ப்புற பகுதி சபை கூட்டம்
தர்மபுரி வட்டார வளர்ச்சி காலனியில் நடந்த நகர்ப்புற பகுதி சபை கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி பங்கேற்றார்.
தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தினத்தையொட்டி முதல் கட்டமாக பகுதி சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 2-வது கட்டமாக தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பகுதி சபை கூட்டங்கள் நடைபெற்றது. தர்மபுரி நகராட்சி 9-வது வார்டு வட்டார வளர்ச்சி காலனியில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கவுன்சிலர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டார். நகராட்சி சார்பில் அலுவலர் சுமன் கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பதிவு செய்தார். இதில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, நிர்வாகிகள் சந்திரமோகன், காசி, குமார், கனகராஜ், முன்னாள் கவுன்சிலர் முருகன் உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாலை வசதி, தெரு விளக்கு, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இந்தக் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.