கடலாடி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
கடலாடி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.
சாயல்குடி,
கடலாடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார். கடலாடி தாசில்தார் மரகத மேரி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிர் காப்பீடு செய்வதற்கு மூவிதழ் அடங்கல் சான்றிதழ் வழங்கும் பணிகள், பட்டா மாறுதல் சான்றிதழ் விண்ணப் பங்கள் நிலுவையை முடிவு செய்தல், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் உள்ளிட்ட பணிகள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் துணை தாசில்தார்கள் சாந்தி, கோமதி, தமிழ்மதி தலைமை நில அளவையர் முத்துமாரி வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். ஆய்விற்கு முன்பாக மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி சீர்மரபினர் நல மாணவர் விடுதியில் தணிக்கை மேற்கொண்டார்.