அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தர்மபுரியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி
தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவை தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். கட்சியின் ஆட்சி மன்ற குழு தலைவர் ஆர்.ஆர்.முருகன், ஜெயலலிதா பேரவை மாநில துணை தலைவர் பாலு, மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான டி.கே.ராஜேந்திரன் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சாம்ராஜ், பாஸ்கர், பூங்காவனம், கணேசன், கட்சி நிர்வாகிகள் வேலாயுதம், ரமேஷ்குமார், நஞ்சன், ராஜா, கண்ணதாசன், மாதேஷ், குமார், தங்கமணி, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story