அ.ம.மு.க. நகர நிர்வாகிகள் கூட்டம்
அ.ம.மு.க. நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தேர்போகி வி பாண்டி தலைமை தாங்கினார். தெற்கு நகர செயலாளர் கார்த்தி, வடக்கு நகர செயலாளர் அஸ்வின் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிய நகர செயலாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 15 நாட்களுக்குள் புதிய நகர நிர்வாகிகள் அமைப்பதென முடிவு செய்யப்பட்டது. அனைத்து வார்டுகளிலும் கட்சிக்கொடியேற்றவும், புதிய உறுப்பினர் எண்ணிக்கையை அதிகமாக சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது. பூத் கமிட்டி அமைக்கவும், கட்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு பொறியாளர் அணி தலைவர் சரவணன், மாவட்ட பொருளாளர் லாரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர் பழனிபெரியசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் விமல், இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுமதி, மகளிர் அணி துணை செயலாளர் உமாராணி, அவைத் தலைவர் மைக்கேல் மற்றும் சக்கரவர்த்தி பாரதி, பாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.