தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம்
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் கட்சி நிர்வாகிகளிடையே களப்பணி ஆற்றுவது குறித்து பேசினார். மாவட்ட அவைத்தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, மாவட்ட விவசாய அமைப்பாளர் சாமி கண்ணு ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இதில், கல்லல் ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், விராமதி மாணிக்கம், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கேஎஸ்.நாராயணன், நகர செயலாளர்கள் நெற்குப்பை பழனியப்பன் கார்த்திகேயன், திருப்பத்தூர் துணை சேர்மன் கான்முகமது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, நகர செயற்குழு உறுப்பினர் ஹரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.