தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்-தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்


தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்-தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஜி.சேகர், தர்மச்செல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகர செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட துணை செயலாளர்கள் உமாசங்கர், ரேனுகாதேவி, ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் சரஸ்வதி துரைசாமி, நடராஜன், வேலுமணி, சோலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சேட்டு வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி கட்சி பணிகள் குறித்து பேசினார்.

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தீர்மானங்கள் குறித்தும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் விளக்கி பேசினார். வருகிற 27-ம் தேதி கட்சி இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், வைகுந்தன், மல்லமுத்து, சபரிநாதன், கருணாநிதி, மடம் முருகேசன், செல்வராஜ், பேரூராட்சி செயலாளர்கள் வீரமணி, சண்முகம் நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story